கேள்வியாளர்: நமஸ்காரம் சத்குரு. லிங்கபைரவி தேவி மூன்றரை சக்கரங்களால்மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம் மற்றும் சரிபாதி அனாகதம் – உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டீர்கள். அதே நேரத்தில் நாம் பைரவியை த்ரினேத்ரினி, “மூன்றாவது கண்ணுடையாள்” என்று குறிப்பிடுவது வழக்கம். மூன்றாவது கண், ஆக்ஞா சக்கரத்துடன் தொடர்புடையது என்றால், லிங்கபைரவிக்கு ஆக்ஞா சக்கரமும் இருக்கிறதா?

சத்குரு: நீங்கள் நினைப்பது போல் மூன்றாவது கண் வெளிப்புறமாக அமைந்திருக்கவில்லை. உங்களுக்கு இங்கே இரண்டு கண்கள் இருக்கும் காரணத்தினால், மூன்றாவது கண் என்பது எங்கேயோ நடுமையத்தில் இருக்கவேண்டும் என்று அனுமானிக்கிறீர்கள். அது அந்தமாதிரி கிடையாது. இந்த இரண்டு கண்களும், ஒளியைத் தடுத்து நிறுத்துபவற்றை மட்டும்தான் பார்க்கமுடியும். ஒரு பொருளானது ஒளியைத் தடுக்கும் காரணத்தினால்தான் உங்களால் அப்பொருளைக் காணமுடிகிறது. ஒளி ஊடுருவிச் செல்லக்கூடிய பொருளாக இருந்தால், நீங்கள் அதைப் பார்க்கமாட்டீர்கள்.

தேவியின் மூன்றாவது கண் என்பது ஒரு குறியீடு மட்டும்தான். ஆக்ஞா அறிதலோடு தொடர்புடையதால், பொதுவாக மூன்றாவது கண் என்பது மற்ற இரண்டு கண்களுக்கு இடையில் இருப்பது போல் வரையப்படுகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உங்களைச் சுற்றியுள்ளவற்றை உங்களால் பார்க்கமுடிவதற்கான ஒரே காரணம் என்னவென்றால், காற்று தனக்குள் ஒளி புகுந்து செல்வதற்கு அனுமதிக்கிறது. ஒளியை காற்று நிறுத்தினால், நீங்கள் அதையும் காண முடியாது. ஆகவே, இந்த இரண்டு கண்களினால், பொருள்தன்மையானதை மட்டும்தான் நீங்கள் பார்க்கமுடியும். பொருள்தன்மையின் பரிமாணத்திற்குள் இருந்தாலும், பொருள்தன்மையான எல்லாவற்றையும் நீங்கள் பார்க்கமுடியாது. இந்த இரண்டு கண்களினால், பொருள்தன்மையின் மிகவும் அடிப்படையான அம்சங்களையே உங்களால் காணமுடியும். காற்று இயல்பில் பொருள்தன்மையானது என்றாலும், அது ஒளியைத் தடுக்காத காரணத்தால், காற்றை நீங்கள் பார்க்கமுடிவதில்லை. பொருள்தன்மையைக் கடந்த எதையும் இந்த இரண்டு கண்களால் காணமுடியாது.

 

பொருள்தன்மையான இயல்பைக் கடந்த எதையேனும் நீங்கள் பார்த்து, உணர்ந்து, புரிந்துகொள்ளத் துவங்கும் கணத்தில், உங்களது மூன்றாவது கண் திறந்துவிட்டதாக நாம் கூறுகிறோம். தேவியின் மூன்றாவது கண் என்பது ஒரு குறியீடு மட்டும்தான். ஆக்ஞா அறிதலோடு தொடர்புடையதால், பொதுவாக மூன்றாவது கண் என்பது மற்ற இரண்டு கண்களுக்கு இடையில் இருப்பது போல் வரையப்படுகிறது. ஆனால் உண்மையில், அது ஏதோ ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருப்பதல்ல.

மூன்றாவது கண்ணுக்கு வெளிப்புறமாக குறிப்பிட்ட ஓர் இடம் இல்லை. அது உடலியல் சார்ந்த ஒரு நிகழ்வல்ல, அது ஒரு புரிதல்.

ஒரு இடத்திற்கு நான் செல்ல நேர்ந்தால், அங்கே ஏதோ ஒருவிதமான சக்தி நிகழ்ந்து கொண்டிருப்பதாக நான் கவனித்தால், அங்கு என்ன நிகழ்கிறது என்று பார்ப்பதற்காக நான் செய்யும் முதல் செயல் என் கண்களை மூடி, விரல்களை இயக்கி, உள்ளங்கை கீழ்முகமாக எனது இடது கையை ஒரு நிலையில் வைத்திருப்பேன். ஏதோ ஒன்று சூடாக உள்ளதா அல்லது குளிர்ச்சியாக உள்ளதா என்பது உங்களுக்குத் தெரியவில்லையென்றால், நீங்களும்கூட அதை உணர்வதற்கு உங்களது உள்ளங்கையை அதன்மீது வைப்பீர்கள். அதனால், உங்களுடைய மூன்றாவது கண் உங்கள் விரலில் இருக்கிறது என்று அர்த்தமா? ஆமாம், அந்தக் கணத்தில், ஒரு விதத்தில் பார்த்தால் அப்படித்தான் நிகழ்கிறது. ஆனால் மூன்றாவது கண்ணுக்கு வெளிப்புறமாக குறிப்பிட்ட ஓர் இடம் இல்லை. அது உடலியல் சார்ந்த ஒரு நிகழ்வல்ல, அது ஒரு புரிதல்.

ஆகவே, தேவிக்கு மூன்றாவது கண் உள்ளதா? நிச்சயமாக. அவள் மூன்றரை சக்கரங்கள் கொண்டவளா? ஆமாம்.

பொருள்தன்மையல்லாத ஒன்றைப் புரிந்துகொள்வதை பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கும்போது, பௌதிக உடலின் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் இந்தக் கண் இருப்பதாக நிச்சயப்படுத்திக்கொள்ள முயலவேண்டாம். பொருள்தன்மையாக இல்லாததற்கு இங்கே அல்லது அங்கே இருக்கும் கட்டாயங்கள் இருப்பதில்லை. அது இங்கேயும் அல்லது அங்கேயும் இருக்கமுடியும். பொருள்தன்மையல்லாத ஒரு பரிமாணத்தைப் பற்றி பேசும்போது, இங்கே, அங்கே என்று அதைத் தொடர்புபடுத்த முடியாது. ஏதோ ஒன்று பொருள்தன்மையில் இல்லாமல் போனால், இடைவெளி அதற்குப் பொருந்துவதில்லை. பொருள்தன்மைக்கு மட்டும்தான் அமைவிடம் தேவைப்படுகிறது. பொருள்தன்மை இல்லாதது எதுவோ, அதற்கு இடமும், புவியியல் அமைப்பும் இல்லை. ஆகவே, தேவிக்கு மூன்றாவது கண் உள்ளதா? நிச்சயமாக. அவள் மூன்றரை சக்கரங்கள் கொண்டவளா? ஆமாம்.

 

lb-yantra-ceremony-tamilbanner

ஆசிரியர் குறிப்பு : அடுத்த யந்திர வைபவம் ஈஷா யோகா மையத்தில் ஜூலை 31, 2019 அன்று நிகழவுள்ளது. ஒரு சக்திவாய்ந்த செயல்முறைக்கான தீட்சை உங்களுக்கு வழங்கப்படுவதோடு, சத்குருவின் முன்னிலையில் யந்திரத்தை நீங்கள் பெறுவீர்கள். மேலும் தகவலுக்கு, இங்கே கிளிக் செய்யலாம் அல்லது அழைக்கலாம் 844 844 7708.