குங்குமம் வைப்பது எதற்காக? (Kungumam in Tamil)
குங்குமம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் குங்குமத்தின் பலன்கள் முதலாக சமூகத்திலும் கலாச்சாரத்திலும் அதன் அடையாளம் வரை, குங்குமத்தின் முக்கியத்துவம் குறித்த பல கேள்விகளுக்கு சத்குரு பதிலளிக்கிறார்.
கேள்வி: கோவிலிலும், நாம் வழிபடும் இடங்களிலும், குங்குமம், சந்தனம் மற்றும் விபூதி வழங்குகின்றனர். இதன் பின்னணியில் ஏதாவது அறிவியல்பூர்வமான காரணம் உள்ளதா?
சத்குரு: சில குறிப்பிட்ட பொருட்கள் மற்றவற்றைக்காட்டிலும் வெகுவிரைவாக சக்தியை ஈர்த்துக்கொள்கின்றன. தற்போது எனக்கு அருகில் ஒரு இரும்பு கம்பி, சிறிது விபூதி மற்றும் ஒரு நபர் இருப்பதாக வைத்துக்கொள்வோம். என்னிடமிருந்து எவ்வளவு சக்தியை அவர்கள் சேகரிக்கின்றனர் என்பது முற்றிலும் வேறுபடுகிறது. அவர்கள் அனைவரும் ஒரே விதமான வாய்ப்பு கொண்டிருக்கின்றனர், ஆனால் அனைவரும் ஒரே அளவில் சக்தியை கிரகித்து, தக்கவைத்திருப்பது கிடையாது.Subscribe
சில குறிப்பிட்ட பொருட்கள், சக்தியை எளிதில் சேகரித்து, தக்கவைத்துக்கொள்ளக் கூடியவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. விபூதி மிக அதிகமான உணர்திறன் கொண்ட ஒன்றாக உள்ளது. அதை மிக எளிதாக சக்தியூட்டி ஒருவருக்குக் கொடுக்கமுடியும். குங்குமமும் அதைப்போன்றதுதான். சந்தனமும்கூட ஓரளவுக்கு அதைப்போன்றது, ஆனால் சக்தியைக் கடத்தும் திறனைப் பொறுத்து, விபூதிக்கு நிச்சயம் நான் முதலிடம் அளிப்பேன்.
பல கோவில்களில், மிகவும் சக்திவாய்ந்த பிராணசக்தியின் அதிர்வுகள் இன்னமும் இருந்துகொண்டிருக்கின்றன, ஆகவே இந்தப் பொருளானது சிறிது நேரத்திற்கு அங்கே வைக்கப்படுவதால், அது ஒரு குறிப்பிட்ட அளவு சக்தியை தனக்குள் கிரகித்துக்கொள்கிறது. அந்த சக்தியைப் பகிர்ந்துகொள்வது நோக்கமாக இருப்பதால், அங்கு வரும் மக்களுக்கு அது வழங்கப்படுகிறது. நீங்கள் உணர்திறனுடன் இருந்தால், அங்கு சிறிது நேரம் இருப்பதாலேயே, இந்த சக்தியை நீங்களாகவே சேகரித்துக்கொள்கிறீர்கள். உங்களுக்கு அந்தளவுக்கு உணர்திறன் இல்லையென்றால், சக்தி நிரம்பிய விபூதி போன்றவை உங்களுக்கு வழங்கப்படல் வேண்டும்.
குங்குமம் எப்படித் தயாரிக்கப்படுகிறது?
குங்குமத்தின் நிறம் சிவப்பு என்றாலும், அது மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு கொண்டு தயாரிக்கப்படுகிறது. அதாவது, லிங்கபைரவி திருத்தலத்தில் தயாரிக்கப்படுவதைப் போன்று, அது முறைப்படி தயாரிக்கப்பட வேண்டும். துரதிருஷ்டவசமாக, பல இடங்களிலும், அது வெறுமனே இரசாயனத் தூளாக இருக்கிறது. மஞ்சள் அற்புதமான பலன்கள் உடையது. இந்தக் கலாச்சாரத்தில் அது மங்கலப்பொருளாகப் பாவிக்கப்படுகிறது, ஏனென்றால் நமது நல்வாழ்வுக்குப் பயன்படக்கூடிய ஒரு குறிப்பிட்ட குணம் அதற்கு உண்டு.
நமது சக்தி, உடல் மற்றும் மனம் எப்படி செயல்படுகிறது என்பதன் அடிப்படையில்தான் நமது வாழ்க்கை நிகழ்கிறதேயன்றி, நம்மைச் சுற்றிலும் என்ன இருக்கிறது என்பதால் அல்ல. நமது சக்திநிலைகளை ஒரு குறிப்பிட்ட திசை நோக்கிச் செலுத்துவதற்கு எதைப் பயன்படுத்தமுடியும் என்கிற இந்தத் தொழில்நுட்பத்தை, இந்தக் கலாச்சாரத்தில் நாம் உருவாக்கினோம். ஆனால் இன்றைக்கு, பெரும்பாலான பெண்கள் குங்குமத்தின் இடத்தை ஸ்டிக்கர் பொட்டிற்கு வழங்கிவிட்டனர். நீங்கள் நெற்றியில் விபூதி அல்லது குங்குமம் அல்லது மஞ்சள் வைத்துக்கொள்ளலாம் அல்லது உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் எதையும் பயன்படுத்தாமல் இருக்கலாம். நீங்கள் நெற்றியில் எதையும் வைத்துக்கொள்ளாமல் ஸ்டிக்கர் பொட்டு வைப்பது என்றால், நீங்கள் மூன்றாவது கண்ணை மூடிவிட்டீர்கள் மற்றும் அது திறப்பதை நீங்கள் விரும்பவில்லை என்பதைப் போன்றது!
பெண்கள் ஏன் குங்குமம் வைக்கின்றனர்?
கேள்வி: திருமணமான பெண்கள் முன்னெற்றியில் ஏன் குங்குமம் வைக்கவேண்டும்? அதன் முக்கியத்துவம் என்ன?
சத்குரு: முக்கியமான விஷயம், அது மஞ்சள் என்பது. அதனை வைத்துக்கொள்வதால் ஆரோக்கியம் மற்றும் குறிப்பிட்ட நற்பலன்கள் கிடைக்கின்றன. மற்றொரு விஷயம், அது சமூகத்தில் ஒரு அடையாளமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு பெண் குங்குமம் வைக்கிறாள் என்றால், அவள் திருமணமானவள் – அதாவது அவள் அணுகக்கூடாதவள் என்பது அர்த்தம். இது ஒரு அடையாளம், அதனால் நீங்கள் ஒவ்வொருவரிடமும் சென்று கூறவேண்டியதில்லை. மேலைநாடுகளில், யாராவது மோதிரம் அணிந்திருந்தால், அவர்கள் திருமணமானவர்கள் என்று அறிந்துகொள்கிறீர்கள். இங்கே அடையாளம் என்னவென்றால், ஒரு பெண்ணிடம் மெட்டியும், செந்தூரமும் காணப்பட்டால், அவள் திருமணமான பெண் என்று அர்த்தம். அவளுக்கு மற்ற பொறுப்புகள் உள்ளன. இது சமூகரீதியாக, ஒரு தெளிவான அடையாளமாக, யார், யாராக இருக்கிறார் என்று பகுத்தறிவதற்கு ஒரு வழியாக, ஒரு சூழ்நிலையை ஒருங்கிணைப்பதற்கு ஏற்றதாக இருக்கிறது.குறிப்பு: லிங்கபைரவி குங்குமம், அதற்கே உரிய வளமான அடர்ந்த சிவப்பு நிறம் மற்றும் இயற்கை மூலப்பொருட்களுடன், ஒருவரை தேவியின் அருளை உள்வாங்குவதற்கு உதவி செய்கிறது. இப்போது ஆர்டர் செய்யுங்கள்.