பணம் பற்றிய சத்குருவின் வாசகங்கள்! (Money quotes in Tamil)

நேரம் என்றால் பணமல்ல. நேரம் என்றால் வாழ்க்கை.

Money quotes in Tamil, செல்வம், பணம், பணம் பற்றிய தத்துவம்

பாலுணர்வு உடலில் இருப்பதில் பிரச்சனையில்லை. பணம் சட்டைப்பையில் இருப்பதில் பிரச்சனையில்லை. இவை உங்கள் மனதிற்குள் நுழைந்தால்தான் பிரச்சனையாகின்றன.

Money quotes in Tamil, செல்வம், பணம், பணம் பற்றிய தத்துவம்

நீங்கள் அருளுக்கு பாத்திரமாக இல்லாவிட்டால், உங்களிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் சரி, நீங்கள் அழகான வாழ்க்கை வாழமாட்டீர்கள். இது என்னுடைய சாபமில்லை - இதுதான் வாழ்க்கை வேலைசெய்யும் விதம்.

Money quotes in Tamil, செல்வம், பணம், பணம் பற்றிய தத்துவம்

உங்கள் பணம் உங்கள் வாழ்க்கைமுறையை மட்டும்தான் நிர்ணயிக்கிறது, உங்கள் வாழ்க்கையின் தன்மையை அல்ல. நீங்கள் எந்த அளவு திறந்தநிலையிலும் உயிரோட்டத்துடனும் இருக்கிறீர்கள் என்பதுதான் உங்கள் வாழ்க்கையின் தன்மையை நிர்ணயிக்கிறது.

Money quotes in Tamil, செல்வம், பணம், பணம் பற்றிய தத்துவம்

நாம் எவ்வளவு வளத்தையும், கல்வியையும், பணத்தையும் வைத்திருந்தாலும், மண்ணையும் நீரையும் மீட்டெடுக்காத வரை நம் குழந்தைகளால் நலமாய் வாழ இயலாது. விழிப்புணர்வான உலகம் - இதுவே முன்னோக்கி செல்வதற்கான வழி.

Money quotes in Tamil, செல்வம், பணம், Save Soil

உங்கள் பணம், உறவுகள் அல்லது குடும்பத்தை காப்புறுதி என்று நினைக்காதீர்கள். உங்களிடம் உள்ள ஒரே காப்புறுதி, அனைத்து நிலைகளிலும் உங்களை நலமாக வைத்துக்கொள்வது எப்படி என்று தெரிந்திருப்பதே. இதுதான் யோகா.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

Panam Quotes in Tamil, பணம், Yoga, யோகா

மகிழ்ச்சி உங்களுக்குள் துவங்குகிறது - உங்கள் உறவுகள், வேலை அல்லது பணத்திலிருந்து அல்ல.

Panam Quotes in Tamil, பணம், மகிழ்ச்சி, Happiness

பணம் சம்பாதிப்பது பற்றி மட்டுமே சிந்திக்காதீர்கள் – நலமாக வாழ்வது பற்றி சிந்தியுங்கள். நலமாக வாழ்வதன் மிக முக்கிய அம்சம், நீங்கள் உண்மையாகவே அக்கறைப்படும் செயலைச் செய்வதுதான்.

Panam Quotes in Tamil, பணம், நல்வாழ்வு, Well-being

உடல் ஒரு மிருகம். பொருட்களை சேகரித்துக் கொள்ளவும், இனப்பெருக்கம் செய்யவுமே அது விரும்புகிறது. அதனாலேயே பணத்திற்கான போராட்டத்திலும் உடலுறவிலும் இத்தனை சக்தி விரயமாகிறது.


Money quotes in Tamil, பணம், உடலுறவு, Sexuality

அளவற்ற செல்வம் என்பது குறுகிய காலமே கொண்ட மனிதனுக்கு எப்படி அர்த்தமுள்ளதாய் இருக்கும்.


Money quotes in Tamil, செல்வம், பணம், பணம் பற்றிய தத்துவம்

பணமும் செல்வமும் வசதியையும் சௌகரியத்தையும் உருவாக்கலாம், ஆனால் அவை நிறைவைக் கொண்டுவராது. இதை நீங்கள் உணர்ந்துவிட்டால் - ...இப்போது யோகா.

Money quotes in Tamil, செல்வம், பணம், பணம் பற்றிய தத்துவம், யோகா, Yoga

பிறப்பையும் இறப்பையும் கடந்து நீங்கள் எடுத்துச்செல்லக்கூடிய ஒரே உண்மையான செல்வம், வாழ்க்கை அனுபவத்தின் ஆழம் மட்டுமே.

Money quotes in Tamil, செல்வம், வாழ்க்கை அனுபவம், Life Experience

உலகில் இவ்வளவு செல்வம் இருக்கும்போது, ஏழ்மை என்பது மனிதகுலத்திற்கு எதிராக இழைக்கப்படும் குற்றமாகும்.

Money quotes in Tamil, செல்வம், பணம், ஏழ்மை, Poverty

நீங்கள் ஒன்றுமில்லாமல் உலகிற்கு வருகிறீர்கள், வெறும் கையுடனேயே திரும்பிச் செல்கிறீர்கள். வாழ்க்கையின் செல்வம், அதன் அனுபவங்கள் உங்களை எந்த அளவு மேம்படுத்த அனுமதிக்கிறீர்கள் என்பதில் உள்ளது.

Money quotes in Tamil, செல்வம், வாழ்க்கை அனுபவம், Life Experience

செல்வச்செழிப்பு நல்வாழ்வு தரவேண்டும் என்றால், உங்களுக்குள் ஆன்மீகத்தின் ஓர் அம்சம் இருக்கவேண்டும். அது இல்லாதபோது, உங்கள் வெற்றியே உங்களுக்கு எதிராக வேலைசெய்ய நேரலாம்.


 Money quotes in Tamil, செல்வம், ஆன்மீகம், Spirituality

நான் செல்வத்திற்கும் வசதிக்கும் எதிரானவனல்ல. நான் தேக்கத்திற்கு எதிரானவன். ஏனெனில் நீங்கள் தேங்கிப்போனால் வெறும் பாதி உயிருடன் இருப்பீர்கள்.


Money quotes in Tamil, செல்வம், தேக்கம், Stagnation

தொடர்புடைய பதிவுகள்:

பணம் சம்பாதிப்பது தவறா?

நம் தினசரி வாழ்வாதாரத்திற்கு நிறைய பணம் தேவைப்படுகிறது. ஆனால் பணம் சம்பாதிப்பதில் கவனமாக இருந்தாலோ, 'இவனுக்கு பணத்தாசை' என்று சாடுகிறார்கள். பணம் சம்பாதிப்பது குற்றமா? சத்குரு விளக்குகிறார்.

பணம் வந்தால் கஷ்டமும் கூட வரும்! - இது உண்மையா?

"பணம் வந்தால் கஷ்டமும் கூட வரும்" என்று சிலர் சொல்லிக் கேட்டிருப்போம். இது உண்மையா? சத்குரு விளக்குகிறார்.

நிறைய பணம்; பெரிய வீடு! - எது நல்வாழ்வு?

சொத்து சேர்ப்பதிலும் பணம் சம்பாதிப்பதிலும் தங்கள் வாழ்க்கை முழுவதையும் செலவிடும் பெரும்பான்மையானோர், நல்வாழ்வை மட்டும் அனுபவிக்க தவறிவிடுகிறார்கள்! அப்படியென்றால் பணமும் செல்வமும் நல்வாழ்வினை தருவதில்லையா? உண்மையான நல்வாழ்வு எது? சத்குருவின் இந்த கட்டுரை உண்மையை உணர்த்துகிறது!