ஈஷா யோகா பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள்: சில ஆராய்ச்சி முடிவுகள்
ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியாவை உள்ளடக்கியதாக ஈஷா யோகா நிகழ்ச்சி உள்ளது. பல்வேறு முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் சக்திவாய்ந்த இந்த யோகப் பயிற்சியின் பலன்கள் அறிவியல்பூர்வமாக ஆராய்ச்சி செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
ஈஷா யோகா என்றால் என்ன?
தொன்மையான யோக அறிவியலின் சாரத்திலிருந்து பெறப்பட்டு சத்குருவால் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படும் ஈஷா யோகா என்பது, நம் உள்நிலை நல்வாழ்விற்கான ஒரு தொழில்நுட்பமாகும். ஒருவரின் தனிப்பட்ட முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி, உங்கள் வாழ்க்கை, உங்கள் வேலை மற்றும் நீங்கள் வாழும் உலகத்தை உணர்ந்து அனுபவிக்கும் விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
தன்னை உணர்வதற்கும், உள்நிலை பரிமாற்றம் அடைவதற்கும் மற்றும் ஒரு முழுமையான, ஆனந்தமான வாழ்வினை நோக்கி செல்வதற்குமான ஒரு தனித்துவம் மிக்கதொரு வாய்ப்பாக ஈஷா யோகா நிகழ்ச்சி அமைகிறது.
ஷாம்பவி பயிற்சியினை தொடர்ந்து பயிற்சிசெய்து வருபவர்களுக்கு மனம் மற்றும் உணர்ச்சி நிலையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் கண்டறியப்படுவதாக நம்பத்தகுந்த அறிவியல் ஆராய்ச்சிகளும் கணக்கெடுப்புகளும் கூறுகின்றன.
மனம் மற்றும் உணர்ச்சி நிலையிலான பலன்கள்
எந்தவித வாழ்க்கைமுறை மாற்றங்களும் இல்லாமலே, ஷாம்பவி பயிற்சி கவனக்குவிப்பு, மனநிலைத் தெளிவு, சக்தி நிலையில் உயர்வு மற்றும் உற்பத்தித் திறன் அதிகரிப்பு ஆகிய பலன்களை வழங்குவது ஆராய்ச்சிகள் மூலம் நிரூபணமாகியுள்ளது.
ஆரோக்கிய பலன்கள்
Subscribe
536 ஷாம்பவி பயிற்சியாளர்களிடத்தில் ஷாம்பவி க்ரியா ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தலைவலி, மைக்ரேன் தலைவலி, ஒவ்வாமை, ஆஸ்துமா, முதுகுவலி மற்றும் மாதவிடாய் கோளாறுகள் போன்ற நாட்பட்ட நோய்களிலிருந்து விடுபடுவதற்கு ஷாம்பவியின் தாக்கம் துணைநின்றுள்ளது, பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
தூக்கத்தின் தரம் மேம்பாடு மற்றும் தூக்கமின்மையிலிருந்து விடுதலை
இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மை வியாதி உள்ளவர்களிடத்தில் மகத்தான முன்னேற்றம் இருப்பதை கணக்கெடுப்புகள் உறுதிப்படுத்துகின்றன. இந்நோய்க்காக எடுத்துக்கொள்ளப்படும் மருந்துகளின் அளவு குறைக்கப்படுகிறது அல்லது 40% பேர்களில் மருந்துகள் முற்றிலும் நிறுத்தப்படுகிறது.
மன அழுத்தம் மற்றும் பயம் ஆகியவற்றிலிருந்து விடுதலை
மன அழுத்தம் மற்றும் பய உணர்வினால் அவதிப்படும் மக்களிடத்தில் ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா பயிற்சிக்குப் பிறகு சிறப்பான முன்னேற்றம் இருப்பது கண்டறியப்படுகிறது. கணக்கு எடுக்கப்பட்ட மக்களில் 50% மேற்பட்டோர் மன அழுத்தம் மற்றும் பய உணர்விற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட மருந்துகளை தங்களது மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு நிறுத்திக்கொள்ள முடிந்ததாகத் தெரிவித்தனர்.
மாதவிடாய் கோளாறுகளிலிருந்து நிவாரணம்
மாதவிடாய் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பெண்களிடத்தில் நடத்திய கணக்கெடுப்பில் ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சிக்குப் பின்னர் சிறப்பான மேம்பாடு இருப்பதை அறியமுடிகிறது. இங்கிலாந்தின் பூலே மருத்துவமனைகள் (Poole Hospitals NHS Trust, UK) மற்றும் இண்டியானா யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆகியவற்றின் ஒரு குழு, ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சியினை மேற்கொள்ளும் 128 பெண்களிடம், அவர்கள் க்ரியாவைத் தொடங்குவதற்கு முன்பும், ஆறு மாத பயிற்சிக்குப் பிறகும் மாதவிடாய் பிரச்சனைகளில் உள்ள மாறுபாடு குறித்து கேள்வி-பதில் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது.
சத்குரு : “நீங்கள் ஆனந்தமாக இருக்கும்போது உங்கள் மனம் மற்றும் உடல் அதன் சிறந்த நிலையில் செயல்படுவதை நிரூபிக்கும் விதமாக இன்று போதுமான அறிவியல் ஆதாரங்கள் உள்ளன. பெரும்பாலான மனிதர்கள் தங்களது இயல்பான திறமைகளில் 15% முதல் 20% வரைதான் செயலாக்கம் பெறுகின்றனர் என்று நான் கூறுவேன். நீங்கள் இங்கே நீடித்த இனிமையான உணர்வில் அமர்ந்திருக்கும்போது மட்டுமே, நீங்கள் தற்போது இருக்கும் நிலையிலிருந்து அதிகமான புத்திசாலித்தனம் மற்றும் கூர்மையுடன் இருப்பதை ஒரு வார காலத்திற்குள் நீங்கள் பார்க்க முடியும்.
வெளிசூழலில் நல்வாழ்வை உருவாக்குவதற்கான அறிவியலும் தொழில்நுட்பமும் இருப்பதைப் போலவே உள்நிலையில் நல்வாழ்வை உருவாக்குவதற்காக முழுமையான அறிவியலும் தொழில்நுட்பமும் இருக்கின்றன. இதைத்தான் நாம் ஈஷா யோகா என்று வழங்குகிறோம்.”
சான்றுகள்:
மாதுரி R et al. ஈஷா யோகா பயிற்சி செய்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட நல்வாழ்விற்கான கணக்கெடுப்பு. மார்ச் 2010
முரளிகிருஷ்ணன் K, பாலகிருஷ்ணன் B, பாலசுப்பிரமணியன் K, விஸ்நேகரவ்லா F. இதயத்துடிப்பின் குறுகிய கால மாறுபாட்டைப் பயன்படுத்தி இதய தன்னியக்க நரம்பு மண்டலத்தின் மீது ஈஷா யோகா பயிற்சி செய்பவர்களிடம் ஏற்படும் தாக்கம் குறித்து அளவீடு. J Ayurveda Integr Med. ஏப்ரல் 2012.
விஞ்சர்க்கார் S, டெல்லெஸ் S, விஸ்வேஷ்வரய்யா NK. தூக்கத்தில் நீண்டகால தியானப் பயிற்சியின் தாக்கம் ஒரு பொருத்தமான கட்டுப்பாட்டுக்குட்பட்ட பரிசோதனை. International Symposium on YOGism. டிசம்பர்.2010..
நீதிராஜன் TP, மாதுரி R, பாலகிருஷ்ணன் B. மாதவிடாய் பிரச்சனைகளில் ஈஷா யோகாவின் தாக்கம்.