இந்தியாவின் உச்ச நீதிமன்றம், இரண்டு பெண் துறவிகளும் தங்கள் விருப்பத்திற்கு மாறாக ஈஷா அறக்கட்டளையில் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறிய வழக்கை தள்ளுபடி செய்தது. 39 மற்றும் 42 வயதான இரண்டு பெண் துறவிகளும் தங்கள் சுய விருப்பத்தின் பேரிலேயே ஈஷா அறக்கட்டளையில் தங்கியிருக்கிறார்கள் என்பதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

உச்ச நீதிமன்றம், ஈஷா அறக்கட்டளையை விசாரிக்குமாறு காவல்துறைக்கு ஆணை பிறப்பித்த மதராஸ் உயர் நீதிமன்றத்திற்கு கண்டனம் தெரிவித்தது

மேலும், இந்தியாவின் தலைமை நீதிபதி (CJI) D.Y. சந்திரசூட் அவர்கள், நீதிமன்றத்தின் விசாரணையை "தனிநபர்களை மற்றும் நிறுவனங்களுக்கு அவப்பெயர் உண்டாக்க பயன்படுத்த முடியாது" என்று குறிப்பிட்டார். ஈஷா அறக்கட்டளையை விசாரிக்குமாறு காவல்துறைக்கு ஆணை பிறப்பித்த மதராஸ் உயர் நீதிமன்றத்திற்கும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், காவல்துறை கொடுத்த அறிக்கையின் விவரங்கள் குறித்து விவாதிக்க மறுத்தது. சொல்லப்போனால், ஒரு கட்டத்தில், வழக்கின் பின்னணியிலுள்ள நோக்கம் சந்தேகத்திற்குரியதாகத் தெரிகிறது என்பதையும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
உங்களுக்கு பெரியவர்களாக வளர்ந்த குழந்தைகள் இருக்கும்போது, அவர்களின் வாழ்க்கையை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் வழக்குத் தொடர முடியாது.

இந்தியாவின் தலைமை நீதிபதி, முன்னதாக இரு பெண் துறவிகளுடனும் கலந்துரையாடியதைக் குறிப்பிட்டு, இருவரும் புத்திசாலிகள் மற்றும் முழுவதும் சுயமாக முடிவெடுக்கக்கூடியவர்கள் என்று குறிப்பிட்டார். காவல்துறையின் அறிக்கையிலும், இரு பெண் துறவிகளும் தங்கள் பெற்றோருடன் அடிக்கடி தொடர்பில் உள்ளனர் என்று ஒப்புக்கொண்டனர் - CCTV காட்சிகள், 70 க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் மற்றும் பெண் துறவிகள் தங்கள் பெற்றோரை நேரில் சந்தித்த பல சந்திப்புகளின் ஆதாரங்கள் உட்பட, பல்வேறு விசாரணைகள் மற்றும் ஆவண ஆதாரங்களின் அடிப்படையில் இதை உறுதிப்படுத்தியிருந்தனர். குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்த மனுதாரரிடம் பேசிய இந்திய தலைமை நீதிபதி, "உங்களுக்கு பெரியவர்களாக வளர்ந்த குழந்தைகள் இருக்கும்போது, அவர்களின் வாழ்க்கையை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் வழக்குத் தொடர முடியாது" என்று தெரிவித்தார்.

நீதிமன்ற ஆணையின் வார்த்தைகளில்: "இரு நபர்களும் ஆசிரமத்தில் சேர்ந்தபோது பெரியவர்களாகவே இருந்தார்கள், மேலும் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா அறக்கட்டளையில் தங்கள் வாழ்க்கையைத் தொடர விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவே ஆட்கொணர்வு மனுவின் நோக்கம் பூர்த்தியாகிறது. உயர் நீதிமன்றம் அதற்கு மேல் எந்த ஆணையும் பிறப்பித்திருக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை."

இந்த தீர்ப்பை வரவேற்ற மா மாயு மற்றும் மா மாதி கூறியதாவது, "துறவற வாழ்க்கையை வாழ விரும்பும் எங்கள் தேர்வை மதித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். நாங்கள் பிறந்த குடும்பம் கொடுத்த இந்த சோதனை எங்களுக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளது, ஆனால் எங்களுக்கு ஆதரவாக நிற்கும் ஈஷா தன்னார்வத் தொண்டர்கள், சத்குரு மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும் நன்றியுணர்வுடன் இருக்கிறோம்."

பெண்கள் தங்கள் வாழ்க்கைத் தேர்வுக்காக அவமானப்படுத்தப்படுகிறார்கள்

இந்த குற்றச்சாட்டுகளின் மிகவும் கவலைக்குரிய அம்சங்களில் ஒன்று, 39 மற்றும் 42 வயதான இரண்டு மகள்களும் தங்கள் தந்தையின் அடக்குமுறைக்கு இணங்கி அடிபணிய வேண்டும் என்ற மறைமுகமான நோக்கம் தான். சொல்லப்போனால், இந்த தந்தை இந்த குற்றச்சாட்டுகளை முன்வைப்பது இது முதல் முறை அல்ல. 2016ம் ஆண்டில், அவரது மனைவி, அவரது மகள்கள் மூளைச்சலவை செய்யப்பட்டதாக கூறி, இதே மாதிரியான ஒரு வழக்கை தொடுத்த போது, மதராஸ் உயர் நீதிமன்றம், இரண்டு பிரம்மச்சரிணிகளை (பெண் துறவிகளை) நேரில் சந்தித்து, அவர்கள் ஈஷா யோக மையத்தில் தங்கள் சுய விருப்பத்தின் பேரில் உள்ளனர் என்றும், அவர்களின் முற்றிலும் சுயமாக சிந்திக்கும் திறனுடையவர்கள் என்றும் உறுதிப்படுத்திய பிறகு வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்திய கலாச்சாரத்தில், பெண்களுக்கு எப்போதும் சரிசமமான முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இதில் வேதனைக்குரியது என்னவென்றால், இந்த சம்பவம், தெய்வீக பெண்தன்மையைக் கொண்டாடும் பாரம்பரியமான இந்தியத் திருவிழாவான நவராத்திரியின் முன்னே அரங்கேற்றப்பட்டது தான். இது அக்கறையில்லாத செயலாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இது மிகவும் தவறானது.

ஈஷாவில், பெண்கள் அவர்களது பாலினத்தின் அடிப்படையில் ஒருபோதும் மதிப்பீடு செய்யப்படுவதும் இல்லை, தரம் பிரிக்கப்படுவதும் இல்லை, பாகுபடுத்தப்படுவதும் இல்லை. ஆனால் இந்த பொய்யான குற்றச்சாட்டுகளால், நம் அரசியலமைப்பில் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள தனிமனித சுதந்திரத்திலும், விரும்பும் மதத்தைப் பின்பற்றும் சுதந்திரத்திலும், இவ்விரண்டு பிரம்மச்சரிணிகளுக்கும், ஈஷா அறக்கட்டளையில் உள்ள மற்ற தன்னார்வத் தொண்டர்கள் அனைவருக்கும் எந்த அளவுக்கு அத்துமீறல் நிகழ்ந்திருக்கிறது என்பது கண்கூடாகத் தெரியும், இவை ஆணாதிக்கம், பெண்களை அவமதிக்கும் மனநிலை மற்றும் அடக்குமுறையின் மனநிலையைக் காட்டுகின்றன.

தனியுரிமையின் அப்பட்டமான அத்துமீறல்

காவல்துறையின் விசாரணை நடந்த நாளில், ஈஷா அறக்கட்டளை மஹாளய அமாவாசையின் புனிதமான சடங்குகளை நடத்திக் கொண்டிருந்தது. மஹாளய அமாவாசை என்பது இந்திய கலாச்சாரத்தில் மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு மரியாதைசெய்து அவர்களை நினைவுகூரும் முக்கியமான நாளாகும். அந்த நாளில் பல விருந்தினர்கள் மற்றும் பக்தர்கள் ஈஷா யோக மையத்திற்கு இதற்காக வந்திருந்தனர். இப்படிப்பட்ட ஒரு முக்கியமான நாளில், விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்ததும், ஈஷா யோக மையத்தில் உள்ள நபர்களிடம் விசாரணை நடத்தியதும், விருந்தினர்களை உணர்ச்சி அளவிலும் மன அளவிலும் மிகவும் பாதித்தது, ஏனெனில் இதை அவர்கள் தனியுரிமையின் மீறலாக உணர்ந்தனர்.

தமிழ் கலாச்சாரத்தைப் புதுப்பித்தலுக்கும் சனாதன தர்மத்துக்கும் எதிரான தாக்குதல்

தமிழ் மக்களின் பாரம்பரியமான வழக்கங்களும் சனாதன தர்மமும் நம் நாட்டில் பல ஆண்டுகளாக இடைவிடாத தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. அடிப்படையே இல்லாத இத்தகைய குற்றச்சாட்டுகள் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக முன்வைக்கப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக, ஈஷா அறக்கட்டளை, மதம், ஜாதி, தேசியம் மற்றும் பாலினத்தின் அடிப்படையிலான பாகுபாடுகளின்றி, தன்னிலை மாற்றத்திற்கான கருவிகளான யோகப் பயிற்சிகளை உலகம் முழுவதும் 100 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக வேலை செய்துள்ளது. இந்த யோக சாதனங்கள், அனைவரையும் தன்னுள் ஒரு பாகமாக இணைத்துக்கொள்ளும் ஒரு ஒற்றுமையான, இணக்கமான உலகத்தை உருவாக்குவதற்கான அடிப்படையாக செயல்படுகின்றன. ஆனால் இந்த பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களோ, பிரிவினைகளை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனால் மிகுந்த பாதிப்புக்கு ஆளாவது ஏழை எளியோரே

இந்த பொய்யான குற்றச்சாட்டுகள் ஏற்படுத்தும் மிகக்கொடிய பாதிப்பு, லட்சக்கணக்கான ஈஷா தன்னார்வத் தொண்டர்களுக்கு நேரும் உணர்ச்சியளவிலான பாதிப்பு இல்லை. ஈஷா அறக்கட்டளையின் பல்வேறு சமூக நலத்திட்டங்களை சார்ந்திருக்கும் கிராமப் பகுதிகளில் வாழும் ஏழை எளியோரும் சமூகத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியினரும் தான் இதனால் மிகவும் பாதிப்படைகின்றனர். இந்தியாவின் கிராமப்புறங்களில் இலவச மருத்துவ சேவைகளால் இதுவரை 50 லட்சம் நோயாளிகள் பலன் பெற்றுள்ளனர், ஈஷாவின் விவசாய இயக்கம், மண்வளம் காக்கும் திட்டங்கள், மற்றும் நீர்வள மேலாண்மை திட்டங்களால் இதுவரை 2,25,000 விவசாயிகள் பயனடைந்துள்ளார்கள், இவர்களது வாழ்க்கை தான் இத்தகைய குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்படுகின்றன. ஏனெனில் ஈஷா அறக்கட்டளை, இந்த மிகவும் முக்கியமான சமூகப் பணிகளுக்கு கவனம் செலுத்த முடியாமல், இந்த அடிப்படையற்ற, அபத்தமான குற்றச்சாட்டுகளை எதிர்த்துப் போராடுவதற்கு கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகிறது.