உலகமெங்கும் இன்னமும் தன் கோரமுகம் காட்டிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) எனும் உலகளாவிய தொற்றுக்கிருமியுடன், நாம் முன்பு எப்போதும் கண்டிராத ஒரு சவாலான கட்டத்தில் இருந்துகொண்டிருக்கிறோம். நாம் அனைவருமே தினசரி வாழ்க்கை முறைகளில் எதிர்பாராத மாற்றங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இந்த மாதிரியான நேரங்களில்தான் நமது உற்சாகம், உள்நிலையின் சமன்பாடு மற்றும் உடல் நலனை மேம்படுத்த வேண்டியது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது, அதனால் நம்மைச் சுற்றிலும் இருக்கும் ஒவ்வொருவரிடத்திலும் ஒரு உத்வேகமிக்க தாக்கத்தினை நாம் ஏற்படுத்த முடியும்.

இந்த நோக்கில், நாம் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளும் விதமாக மிக எளிமையான, ஆனால் சக்திவாய்ந்த, வழிகாட்டுதலுடன் கூடிய சாதனாவாக, ஒரு தினசரி பயிற்சியை சத்குரு வழங்கியுள்ளார். கூடுதலான வழிகாட்டலைப் பெற விரும்புபவர்கள் இந்த தினசரி பயிற்சிக்கான கால அட்டவணைக்கு தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.

தினசரி சாதனா (பயிற்சி) – அனைவரும் கற்றுக்கொள்ளலாம்

“யோக யோக யோகேஷ்வராய” உச்சாடணம் (12 முறை), அதைத் தொடர்ந்து ஈஷா கிரியா தியானம்

பயிற்சியை கற்றுக்கொள்ளுதல்

படி 1: பயிற்சியின் தனித்தன்மை பற்றி சத்குரு

 

படி 2: “யோக யோக யோகேஷ்வராய” உச்சாடணத்தைக் கற்றுக்கொள்ளுதல்

 

படி 3: ஈஷா கிரியாவை கற்றுக்கொள்ளுங்கள்

 

படி 4: முழுமையான குறிப்புகளுடன் தினசரி பயிற்சி: “யோக யோக யோகேஷ்வராய” உச்சாடணம், தொடர்ந்து ஈஷா கிரியா

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

 

சிம்ம கிரியா 

இந்த எளிய யோகப் பயிற்சி மூலம் உங்கள் நோய் எதிர்ப்பு ஆற்றலுக்கு வலிமை சேர்த்திடுங்கள், நுரையீரல் கொள்ளளவை அதிகரித்திடுங்கள்

சவாலான இந்நேரத்தில் உறுதுணையாக, ஒருவரின் நோய் எதிர்ப்பு ஆற்றலுக்கு வலிமை சேர்ப்பதற்கும், சுவாச மண்டலத்ததை வலுவூட்டுவதற்கும் உதவும் வகையில் ஒரு எளிமையான பயிற்சியை சத்குரு வழங்குகிறார்.

பயிற்சிக்கான விதிமுறைகள்

  1. உங்கள் வயிறு முழுவதுமாக நிரம்பிய நிலையில் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்; நீங்கள் ஓரளவுக்கு பசியுடன் இருக்க வேண்டும். உங்களது முந்தைய உணவிற்கும் இந்த பயிற்சியை துவங்குவதற்கும் இடையே குறைந்தது 2 ½ மணிநேர இடைவெளி கொடுப்பது நலம்.

  2. கடந்த 6 மாதங்களுக்குள் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டிய அவசியம் நேர்ந்தவர்களைத் தவிர, 6 முதல் 70 வயதுக்குட்பட்ட அனைவரும் தங்கள் உடல்நிலை மற்றும் மருத்துவ நிலை சார்ந்த எவ்வித நிபந்தனைகளும் இன்றி இந்த பயிற்சியை செய்யலாம்.

  3. 6 வயதிற்கு உட்பட்டவர்களும் 70 வயதிற்கு மேற்பட்டவர்களும் இந்த பயிற்சியைச் செய்யலாம், ஆனால் அவர்கள் சுவாச பயிற்சியை 12 முறை மட்டுமே செய்ய வேண்டும் (21 முறை அல்ல).

  4. மூளையில் இரத்தக்கசிவு அல்லது மூளையில் கட்டி உள்ளவர்களும் இந்த பயிற்சியை செய்யலாம், ஆனால் அவர்கள் சுவாச பயிற்சியை 12 முறை மட்டுமே செய்ய வேண்டும் (21 முறை அல்ல).

 

சிம்ம கிரியா FAQs

ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியாவிற்கு தீட்சை பெற்றவர்களுக்கானது

ஏதாவது ஒரு சவாலை எதிர்கொள்ளும்போது, நமது புத்திசாலித்தனம், ஆரோக்கியம், சமநிலை போன்றவை மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. உள்முகமாகத் திரும்புவது இன்னும் கூடுதல் அவசியமாகிறது. இந்தத் தனிமைப்படுத்தல் கொடுத்திருக்கும் நேரத்தை, உள்நிலையின் உற்சாகத்தையும், சமநிலைத் தன்மையையும் உருவாக்குவதற்குப் பயன்படுத்திக்கொள்ள நீங்கள் விரும்பினால், 40-நாள் சாதனா வழிகாட்டலுக்கு பதிவு செய்யலாம்.

உரிய தகவல்களுடன் பதிவு செய்பவர்களை நாங்கள் தொடர்புகொண்டு, சத்குரு வடிவமைத்து வழங்கியுள்ள ஒரு தினசரி பயிற்சிக்கான கால அட்டவணையை வழங்குவோம்.

40- நாள் சாதனா வழிகாட்டலுக்கு கீழே பதிவு செய்யுங்கள்.

(தயவுசெய்து கவனிக்க, நீங்கள் ஏற்கனவே ‘தினசரி சாதனா' பிரிவில் பதிவு செய்திருந்தால், இங்கே மீண்டும் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை)

 

மேலும் விவரங்களுக்கு, கீழ்க்கண்ட இணையத்தில் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்

SadhanaSupport.usa@ishafoundation.org (For USA and Canada)

SadhanaSupport.europe@ishafoundation.org (For UK and Europe)

SadhanaSupport.apac@ishafoundation.org (For Asia (except India) and Australia/New Zealand)

SadhanaSupport.russian@ishafoundation.org (For Russian-speaking countries)

SadhanaSupport@ishafoundation.org (For India and the rest of the world)