கேள்வியாளர்: பிரம்ம முகூர்த்தம் என்பது குறிப்பாக எந்த கால நேரத்தை குறிக்கிறது? அதன் முக்கியத்துவம் என்ன? மேலும் அந்த நேரத்தில் அதிகப்படியான சக்தியை எவ்வாறு உள்வாங்கிக் கொள்வது?

பிரம்ம முகூர்த்தம் குறிக்கும் கால நேரம்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
சத்குரு: நாம் இரவை சூரிய அஸ்தமனத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடைப்பட்ட கால நேரமாக கருதினால் அதில் இரவின் கடைசி கால் பகுதி நேரம் பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படும். அது அதிகாலை 3:30 மணியிலிருந்து கிட்டத்தட்ட 5:30 அல்லது 6:00 வரை இருக்கும்; அல்லது சூரிய உதயம் வரை.

பிரம்ம முகூர்த்தத்தில் நிகழ்வது என்ன?

பூமிக்கு சூரியனிடமும் நிலவிடமும் உள்ள தொடர்பின் இயல்பை நோக்கினால் இந்த கால நேரத்தில் மனித அமைப்பில் ஒரு குறிப்பிட்ட உடல் நிலை மாற்றம் ஏற்படுவதை நாம் அறிய முடியும். உங்கள் உடம்பில் உள்ள கழிவு பொருட்கள் - உதாரணத்திற்கு சிறுநீர் - மற்ற நேரங்களில் இல்லாதவகையில் பிரம்மமுகூர்த்தத்தில் ஒரு குறிப்பிட்ட தன்மையில் இருப்பதை மருத்துவ அறிவியலும் கண்டறிந்துள்ளது.

இது குறித்து கணிசமான அளவு ஆராய்ச்சிகள் நடைபெற்றுள்ளன. முழு உடலும் ஒரு குறிப்பிட்ட நிலையில் உகந்த சூழலில் அமைந்துள்ளது. மேலும் கூம்புச் சுரப்பி கருப்புநிறமி (மெலடோனின்) எனப்படும் சுரப்பை இயல்பாகவே சுரக்கிறது. அதை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில் பிரம்ம முகூர்த்தத்தில்தான் கூம்புச் சுரப்பி அதிக அளவில் சுரக்கிறது. அதாவது நீங்கள் ஒரு நிலையான தன்மையை உருவாக்கிக்கொள்ளலாம்.

நவீன மருத்துவத்தில் கருப்புநிறமி (மெலடோனின்) மனநிலையை நிலைப்படுத்தும் தன்மையில் உள்ளது என்று அறிந்துள்ளனர். வெகு காலமாக உங்களை நீங்களே ஒரு நிதானமான சூழ்நிலைக்கு கொண்டு வருவதை பற்றி நான் பேசி வருகிறேன்! உங்களை நீங்களே நிதானமாக வைத்திருப்பது என்பதற்கு நீங்கள் எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் இருப்பது என்று அர்த்தம். நிதானத்திற்கு வருவது பிரம்ம முகூர்த்தத்தில் இயல்பாகவே நடக்கும்.

இந்த கால நேரத்தில் மக்கள் எழுந்து அமர்ந்து அவர்களின் ஆன்மீக சாதனையை மேற்கொள்வதன் மூலம் அதிக அளவு பயன் பெறமுடியும். பிரம்மமுகூர்த்தம் என்பதற்கு படைப்பின் காலம் என்று பொருள். நீங்கள் இதை இவ்வாறு பார்க்கலாம்: உங்களை நீங்களே உருவாக்கிக் கொள்வதற்கான கால நேரம் இது. இந்த அதிகாலை வேளையில் நீங்கள் பிரம்மனாக மாறுகிறீர்கள். எனவே நீங்கள் விரும்பும் வண்ணம் உங்களை நீங்களே உருவாக்கிக்கொள்ள முடியும்.

ஆசிரியர் குறிப்பு:படைப்பிலிருந்து படைத்தவனுக்கு” என்ற புத்தகத்தில் சத்குரு அவர்களின் உள்நோக்கிய பார்வையை மேலும் அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் விரும்பிய தொகையை செலுத்தி இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். இலவச பதிவிறக்கத்திற்கு "0" என்று உள்ளிடலாம் அல்லது "இலவசமாக பெறுங்கள்" என்பதை கொடுக்கலாம்.