அபினவ் பிந்த்ரா : இளைஞர்களின் முழுமையான வளர்ச்சிக்கு விளையாட்டு அத்தியாவசியமாக இருக்கிறது. இது உடல்ரீதியான, சமுதாயரீதியான, உணர்வுரீதியான ஆரோக்கியத்தை வழங்குவதுடன், குழுவாக செயலாற்றும் திறனையும் ஆரோக்கியமான போட்டியுணர்வையும் வளர்க்கிறது. நம் தேசத்து இளைஞர்களை விளையாட்டை நோக்கி செலுத்தி, நம் சமுதாயத்தை விளையாட்டில் அதிகம் ஈடுபடுத்துவதற்கு, நாம் ஒரு இயக்கம் உருவாக்குவது எப்படி?

சத்குரு : நமஸ்காரம் அபினவ். விளையாட்டில் சிறந்த விஷயம் என்னவென்றால், முழு ஈடுபாடு இல்லாமல் விளையாட முடியாது. வாழ்க்கையின் சாராம்சமும் நம் ஈடுபாட்டில்தான் இருக்கிறது. விளையாட்டிற்கு ஈடுபாடு அவசியம். பள்ளிக்கோ கல்லூரிக்கோ ஈடுபாடின்றி நீங்கள் போகலாம், ஈடுபாடின்றி உங்கள் அலுவலகத்திற்குப் போகலாம், ஈடுபாடின்றி திருமணம்கூட செய்துவிடலாம், ஆனால் ஈடுபாடின்றி விளையாட முடியாது - அப்படிச்செய்தால் எதுவும் நீங்கள் விரும்பும்விதமாக நடக்காது.

ஒரு பந்தை உதைக்கும்போது அல்லது அடிக்கும்போது, அல்லது துப்பாக்கி சுடுதலிலால் தோட்டாவை செலுத்தும்போது, முழுமையான ஈடுபாடு இல்லாவிட்டால் அது எங்கு செல்லவேண்டுமோ அங்கு செல்லாது. சமுதாயத்தில் எது நடக்காவிட்டாலும், பிறரைக் குறைசொல்லி உண்மையை மூடிமறைத்துவிட முடியும். ஆனால் விளையாட்டில், "உங்கள் செயலுக்கு நீங்கள்தான் பொறுப்பு" என்ற உண்மை உங்கள் முகத்திற்கு முன்னால் ஒளிவுமறைவின்றி நிற்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

national-sportsday-sadhgurutweet-tamilblog

விளையாட்டின் மிகச்சிறந்த அம்சம் இதுதான். இது நம் வாழ்க்கைக்குள் வரவேண்டுமா? நிச்சயமாக! விளையாட்டை இந்த தேசத்தின் அங்கமாக்குவது எப்படி? விளையாட்டில் பெரியளவில் ஈடுபடும் தேசமாக இந்தியா மாறவேண்டும் என்றால், கிராமங்களில் இருக்கும் 65% இந்தியா இதில் ஈடுபடவேண்டும். அதற்காக நாங்கள் ஆயிரக்கணகான கிராம மக்கள் கலந்துகொள்ளும் கிராமோத்சவ நிகழ்ச்சிகள் நடத்துகிறோம். விளையாட்டுத் துறையின் மூத்தவர்கள் அனைவரும், விளையாட்டு வீரராக நேரடியாக விளையாடும் காலத்தைக் கடந்துவிட்டவர்கள் அனைவரும், தேசம் முழுவதிலுமுள்ள கிராமங்களுக்கு விளையாட்டை எடுத்துச்செல்ல உதவவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஆசிரியர் குறிப்பு: சர்ச்சைக்குரிய சிந்தனையா, பேசினால் பிறர் தூற்றக்கூடிய விஷயம் பற்றி குழப்பமா, எவரும் பதில் சொல்ல விரும்பாததால் உங்களைத் துளைக்கும் கேள்வியா, கேட்பதற்கு இதுதான் நேரம்! சத்குருவிடம் நீங்கள் கேட்க விரும்புவதை UnplugWithSadhguru.org வலைதளத்தில் பதிந்திடுங்கள்!

YAT18_Newsletter-650x120