சுற்றுச்சூழலை பாதுகாக்க மண்ணைக் காப்பாற்றுங்கள்
நமது மண் சத்துடனும் வளமாகவும் இருப்பதை உறுதிசெய்வது சுற்றுச்சூழலில் பேரழிவைத் தவிர்ப்பதற்கு முக்கியமானதாகும். மண் புத்துயிர் பெறுவதன் முக்கியத்துவத்தை விளக்கி, மண்ணைக் காப்பாற்ற நாம் பயன்படுத்தக்கூடிய ஐந்து முறைகளை சத்குரு பகிர்ந்துகொள்கிறார்.
சத்குரு மண் சிதைவின் 2 காரணங்களையும் அதன் 4 விளைவுகளையும்
பகிர்ந்துகொள்கிறார் – பூமியின் சீரழிவுக்கு சுற்றுச்சூழல் ஒரு முக்கிய அம்சமாகும்.
நாம் ஏன் மண்ணைக் காப்பாற்ற வேண்டும்?
சத்குரு: இந்த கிரகத்தில் உள்ள உயிரினங்களில் எண்பத்து ஏழு சதவிகிதம் – நுண்ணுயிரிகள், புழுக்கள், பூச்சிகள், பறவைகள், விலங்குகள், மனிதர்கள், தாவரங்கள், மரங்கள் மற்றும் கிரகத்தில் உள்ள மற்ற எல்லா தாவரங்களும் சராசரியாக முப்பத்து ஒன்பது அங்குல மேல்மண்ணால் தாங்கப்படுகின்றன. மேலும் அது இப்போது பெரும் ஆபத்தில் உள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகளில், உலகின் மேல்மண்ணில் நாற்பது சதவிகிதம் அழிந்துவிட்டது. இன்னும் நாற்பத்தைந்து முதல் அறுபது வருடங்களுக்கு தோராயமாக எண்பது முதல் நூறு அறுவடைகளுக்கு மட்டுமே நம்மிடம் மண் உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது. அதன்பிறகு உணவு உற்பத்தி செய்ய மண் கிடைக்காது. உலகில் அப்போது நாம் படப்போகும் துன்பங்களை நீங்கள் கற்பனை செய்யலாம். இந்தியாவின் முப்பது சதவீத நிலம் ஏற்கனவே சீரழிந்துள்ளது, மேலும் இந்தியாவின் 90% மாநிலங்களில் மண் பாலைவனமாக மாறி வருவதைக் காண்கிறோம். அதாவது அங்கு எதுவும் பயிரிட முடியாது. எனவே, நம் எதிர்கால சந்ததியினருக்காக இந்த மண்ணைப் பாதுகாப்பது மிக முக்கியமானதாகும்.மண் புத்துயிர் பெற செய்வது சுற்றுச்சூழலுக்கு எவ்வாறு உதவும்?
ஜெர்மனியில் உள்ள ஐ.நா. ஏஜென்சி ஒன்றில் நான் பேசிக்கொண்டிருந்தேன், அவர்கள் என்னிடம் கேட்டார்கள், "சுற்றுச்சூழல் பேரழிவைத் தடுக்க நாம் செய்ய வேண்டிய மூன்று விஷயங்கள் என்ன?" நான் சொன்னேன், "'மண், மண் மற்றும் மண்' என்பது மூன்று விஷயங்கள்." காற்று மாசுபாடு பற்றி பேசுவது நகரங்களில் நாகரிகமாக இருப்பதால் இது கவனிக்கப்படாமல் உள்ளது. இது கவலைபட வேண்டிய விஷயம் இல்லை என்று நான் கூறவில்லை, ஆனால் மண்ணை சரிசெய்ய தேவையான நடவடிக்கைகளை நீங்கள் எடுத்தால், அந்த நடவடிக்கை தண்ணீரையும் கவனித்துக்கொள்ளும். நமது பொருளாதார சுகத்தை கொஞ்சம் தியாகம் செய்ய தயாராக இருந்தால் காற்று மாசுபாட்டை குறுகிய காலத்தில் சரிசெய்துவிடலாம். ஆனால் நீங்கள் அழித்த மண்ணை சரிசெய்ய வேண்டும் என்றால், நீங்கள் அதை ஆக்ரோஷமாக செய்தால் 15-25 ஆண்டுகள் ஆகும். அதிக ஆர்வமில்லாமல் செய்தால், அதை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு கொண்டுவருவதற்கு, 40-50 வருடங்கள் ஆகும்.
இவ்வளவு காலம் மண் மோசமான நிலையில் இருந்தால், இரண்டு மூன்று தலைமுறையினர் வாழ்க்கையின் மோசமான நிலைகளைக் கடந்துசெல்வர் என்று அர்த்தம்.
மண் புத்துயிர் பெறுவதற்கான 5 முறைகள்
#1 கரிம உள்ளடக்கம் ஆரோக்கியமான மண்ணை உருவாக்குகிறது
இந்தியாவில் ஆயிரக்கணக்கான தலைமுறைகளாக ஒரே நிலத்தை மக்கள் உழவுசெய்து வருகின்றனர். ஆனால், கடந்த தலைமுறையில் மண்ணின் தரம் மிகவும் மோசமாகி, பாலைவனமாக மாறும் தருவாயில் உள்ளது. நீங்கள் மண்ணைப் பாதுகாக்க விரும்பினால், அதில் கரிம உள்ளடக்கம் செய்யவேண்டும். ஆனால் நமது மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டு லட்சக்கணக்கான விலங்குகள் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவை விலங்குகள் அல்ல, இது வேறுநாட்டிற்கு செல்லும் நமது ‘மேல் மண்’. இது நடந்தால், மண்ணை எவ்வாறு நிரப்புவீர்கள்?
இலைகள் அல்லது விலங்கு கழிவுகள் இல்லையென்றால், நீங்கள் எதையும் திரும்ப கொண்டுவர முடியாது. ஒவ்வொரு விவசாயக் குடும்பமும் அறிந்த எளிய ஞானம் இது. ஒரு குறிப்பிட்ட அளவு நிலத்தில் எத்தனை விலங்குகள் மற்றும் மரங்கள் இருக்கவேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.
இந்தியா முப்பத்து மூன்று சதவிகிதம் நிழலில் இருக்கவேண்டும் என்று பழைய திட்டக் குழுவால் ஏற்கனவே அமைக்கப்பட்ட தேசிய அபிலாஷை உள்ளது, ஏனென்றால் நீங்கள் மண்ணைப் பாதுகாக்க விரும்பினால், அதுதான் ஒரே வழி. உங்களுக்கு ஒரு ஹெக்டேர் நிலம் இருந்தால், அந்த நிலத்தில் குறைந்தபட்சம் ஐந்து மாடுகளையாவது கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என்ற சட்டத்தை நான் முன்வைக்க முயற்சிக்கிறேன். இந்த நிலத்தில் ஒரு அற்புதமான விஷயம் உள்ளது, அதற்கான அறிவியல் தகவல்கள் நம்மிடம் உள்ளன, ஆனால் இன்னும் அறிவியல் பகுத்தறிவு வரவில்லை. இந்த நாட்டில் நல்ல மண்வளம் உள்ள இடத்திற்கு சென்று இந்த மண்ணில் ஒரு கனமீட்டரை எடுத்துக்கொண்டால், அந்த ஒரு கனமீட்டரில் தோராயமாக 10,000 உயிரினங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த கிரகத்தில் எங்கும் காணப்படும் உயிர்களின் மிக உயர்ந்த செறிவு இதுவாகும். ஏன் என்று தெரியவில்லை. எனவே, இந்த மண்ணுக்கு ஒரு சிறிய ஆதரவு தேவை. நீங்கள் அதற்கு சிறிய ஆதரவைக் கொடுத்தால், அது விரைவாக புத்துயிர் பெரும். ஆனால், ஒரு தலைமுறையாக, அந்தச் சிறிய ஆதரவைக் கொடுக்கத் தேவையான மூளை நமக்கு இருக்கிறதா அல்லது அது இறப்பதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்போமா?
உரம் மற்றும் டிராக்டர் மூலம் மண்ணை வளமாக வைத்திருக்க முடியாது. நிலத்தில் விலங்குகள் தேவை. பழங்காலத்தில் இருந்தே, நாம் பயிர்களை வளர்க்கும்போது, பயிர்களை மட்டுமே எடுத்துக்கொண்டோம், மீதமுள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளின் கழிவுகள் எப்போதும் மண்ணுக்குத் திரும்பும். அந்த ஞானத்தை நாம் இழந்துவிட்டோம் என்று தோன்றுகிறது.
#2 மரம் சார்ந்த விவசாயம் அல்லது வேளாண் காடு வளர்ப்பு
"வன உற்பத்தி" என்ற சொல் நமது சொற்களஞ்சியத்தில் இருந்து வெளியேற வேண்டும். வன உற்பத்தி என்று எதுவும் இல்லை, ஏனெனில் இந்த கிரகத்தில் காடுகளை விளைபொருளாகப் பயன்படுத்துவதற்கு போதுமான காடுகள் இல்லை. அது காலம் கடந்துவிட்டது. எதிர்காலத்தில் வன உற்பத்தி பற்றி பேசமுடியாது.
புதிய மழைக்காடுகளை நாம் உருவாக்க முடியாது, ஏனென்றால் அதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உழைப்பு தேவைப்படுகிறது. ஆனால், கண்டிப்பாக பசுமை போர்வை உருவாக்க முடியும், மரம் சார்ந்த விவசாயத்தில் இறங்காதவரை, பசுமை போர்வை உருவாக்குவது நடக்காது. மேலும் நிலத்தின் பெரும்பகுதி விவசாயிகள் வசம் உள்ளதால், மரங்களை வளர்ப்பதற்கு அவர்களுக்கு லாபம் தரும் வரை, மரங்கள் வளராது.
பல வருட உழைப்புக்குப் பிறகு, ஐக்கிய நாடுகள் சபை இன்று தெளிவாக தெரிவிப்பது, இதன் தீர்வு மரம் சார்ந்த விவசாயம்தான். அதைத்தான் 22 வருடங்களாக நாம் வலியுறுத்தி வருகிறோம். மேலும் 107,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரங்களை அடிப்படையாகக் கொண்ட விவசாயத்தை சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நிலைகளில் செய்திருப்பதற்கு ஆதாரம் உள்ளது.
#3 இறைச்சி உண்பதை குறைக்கவேண்டும்
உலகில் விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்படும் சுமார் 40 மில்லியன் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 77% விலங்குகள் மற்றும் அவற்றின் உணவுகளை வளர்க்கப் பயன்படுகிறது. கிடைக்கக்கூடிய பல்வேறு தீர்வுகளுடன் ஒப்பிடுகையில், இறைச்சி உண்பதை குறைப்பது மண்வளத்தை மீட்டெடுக்க எளிய விஷயங்களில் ஒன்றாகும். இறைச்சி நுகர்வு 50% குறைக்கப்பட்டால், இந்த பூமியில் 20 மில்லியன் சதுர கிலோமீட்டர் நிலம் மரம் சார்ந்த விவசாயத்திற்கு கிடைக்கும். இவ்வளவு மரங்களை வளர்த்தால், காட்டில் இருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களையும் விவசாய நிலத்தில் விளைவிக்க முடியும். விவசாயிகள் வளம் பெறுவார்கள், மண்ணையும் வளமாக்குவீர்கள். இந்த சூழலில், நீங்கள் இறைச்சியை விட்டுவிட வேண்டியதில்லை – 50% குறைவாக சாப்பிடுங்கள். எல்லா மருத்துவர்களும் அதைச் செய்ய சொல்கிறார்கள். இது ஒரு சுற்றுச்சூழல் தீர்வுகூட அல்ல, இது உங்கள் வாழ்க்கைக்கான ஆரோக்கிய தீர்வு.
#4 பழ உணவு – உங்களுக்கும் பூமிக்கும் ஆரோக்கியமானது
மருத்துவமனையில் யாராவது உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம், நிச்சயமாக நீங்கள் அவர்களுக்கு மாமிசம் அல்லது பிரியாணி கொண்டுபோக மாட்டீர்கள். நீங்கள் பழங்களைதான் எடுத்துசெல்வீர்கள். "குறைந்தபட்சம் இப்போதாவது புத்திசாலித்தனமாக சாப்பிடுங்கள்!" என்ற செய்தி தெளிவாக உள்ளது. ஆனால் எடுத்தவனுக்கு கிடைக்காது! ஹியூன்சாங் மற்றும் மெகஸ்தனிஸ் போன்ற பயணிகள் இந்தியாவிற்கு வந்தபோது, இந்தியர்களின் உணவில் விகிதாச்சாரத்தில் அதிக அளவில் பழங்கள் இருப்பதைக் கண்டு, "அவர்கள் அறிவுத்திறன் கூர்மையாக இருப்பதற்கு அதுவே காரணமாக இருக்கலாம்" என்று கூறினார்கள். நாம் உண்ணும் உணவை உணராததால் நாம் மந்தமாகிவிடுகிறோம்.
நீங்கள் உண்ணும் உணவில் 75% தண்ணீர் இருந்தால், உங்கள் ஆரோக்கியம் மிக எளிதாக நிர்வகிக்கப்படும். நீங்கள் ஒரு பச்சை காய்கறியை சாப்பிட்டால், நீர் உள்ளடக்கம் தோராயமாக 70% க்குமேல் இருக்கும். நீங்கள் ஒரு பழத்தை சாப்பிட்டால், அது பொதுவாக 90% க்கும் அதிகமான நீர். எனவே அதுவே சிறந்த உணவுமுறை. நமது உணவில் குறைந்தது 30-40% மரங்களில் இருந்து வரவேண்டும், 4 மாத சுழற்சி பயிர்களிலிருந்து அல்ல. அதாவது நாம் அனைவரும் இன்னும் கொஞ்சம் பழங்களை சாப்பிடவேண்டும். தற்போது, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அல்லது தாய்லாந்தில் இருந்து பழங்கள் வருவதால், பழங்கள் விலை அதிகம். நீங்கள் இங்கு உள்ளூர் வெப்பமண்டல பழங்களை வளர்த்தால், அவை மிகவும் விலை உயர்ந்தவை அல்ல..
#5 ஒரு உணர்வுமிக்க கிரகத்தை உருவாக்குதல்
பூமிக்கு நாம் செய்யும் சேதத்தை வேறு எந்த உயிரினமும் செய்திருந்தால், அவற்றைச் சமாளிப்பதற்கான வழியைக் கண்டுபிடித்திருப்போம். கோடிக்கணக்கான செவ்வாய் வெட்டுக்கிளிகள் இங்கு இறங்கி நம் மரங்கள் அனைத்தையும் வெட்டி, நமது மண்ணை பாலைவனமாக்கி, நமது நதிகளின் நீரை உறிஞ்சி எடுத்தால் – நாம் நிச்சயமாக அவற்றை அழித்திருப்போம். ஆனால் பிரச்சனை அந்நிய வெட்டுக்கிளிகள் அல்ல. பிரச்சனை நாம்தான்.
பிரச்சனைக்கு நாமே மூலக்காரணமாக இருப்பதால், தீர்வுக்கும் நாமே ஆதாரமாக இருக்கமுடியும். நாம் ஒரு சுயநினைவற்ற, நிர்பந்தமான செயல்முறையில் இருப்பதால் மட்டுமே நாம் ஒரு பிரச்சனையாக இருக்கிறோம். நாம் விழிப்புடன் இருந்தால், இயற்கையாகவே ஒரு தீர்வாக இருப்போம். அதனால்தான் நான் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற சக்திகளுடன் இணைந்து பணியாற்றிவருகிறேன், மேலும் இந்த "Conscious Planet" இயக்கத்தின் யோசனையை முன்மொழிகிறேன்.
520 கோடி மக்கள் வாக்களித்து தங்கள் நாட்டின் தலைமையை தேர்ந்தெடுக்கும் திறன் கொண்ட நாடுகளில் வாழ்கின்றனர். சுற்றுச்சூழலியல் பிரச்சனைகள் அரசாங்கங்களைத் தேர்ந்தெடுக்கும் பிரச்சனைகளாக மாறும்வகையில் குறைந்தபட்சம் 300 கோடி மக்களைக் கொண்டுசெல்வது எப்படி என்று நாங்கள் பார்க்கிறோம். இந்த 300 கோடி மக்களுக்கு குறைந்தபட்சம் தங்கள் நாட்டில் நடக்கவேண்டிய ஐந்து சூழலியல் அம்சங்களைப் பற்றியும், நடக்கக்கூடாத இரண்டு அல்லது மூன்று அம்சங்களைப் பற்றியும் தெரியப்படுத்த விரும்புகிறோம். இப்படிச் செய்தால், சுற்றுச்சூழலும், தேர்தல் அறிக்கைகளில் முதன்மையானதாக இல்லாவிட்டாலும், இரண்டாவதாக இருக்கும்.
கான்சியஸ் பிளானட் (Conscio
தற்போது, உலக மக்கள்தொகையில் 95% க்கும் அதிகமானோருக்கு, தங்களைச் சுற்றி உருவாகும் சுற்றுச்சூழல் பேரழிவைப் பற்றிய விழிப்புணர்வு இல்லை. சுற்றுச்சூழலியல் விழிப்புணர்வு என்பது ஒரு சிறிய பிரிவினருக்கு மட்டுமே உள்ளது, மேலும் அவர்களிடையேகூட, சூழலியல் பற்றிய யோசனை பெரும்பாலும் குளிக்கும்போது குறைந்த தண்ணீரைப் பயன்படுத்துதல் அல்லது பல் துலக்கும்போது குழாயை அணைக்கவேண்டும். மக்கள் தாங்கள் பயன்படுத்துவதைப் பற்றி விழிப்புடன் இருப்பது அற்புதமானது, ஆனால் இது ஒரு முழுமையான சுற்றுச்சூழல் தீர்வு அல்ல. சூழலியல் ஒரு தேர்தல் பிரச்சனையாக மாறினால் மட்டுமே, அது அரசாங்கக் கொள்கையாக மாறும், அப்போதுதான் தீர்வுகள் வெளிப்படும் வகையில் பெரிய பட்ஜெட்கள் ஒதுக்கப்படும்.
ஆசிரியரின் குறிப்பு: இயக்கத்தைப் பற்றி மேலும் அறிய ஆவலாக உள்ளீர்களா? Conscious Planet-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.
Subscribe